அதிபர் செய்தி
திருமதி பு.சத்தியலோஜினி
ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பௌதீக வள அபிவிருத்தியையும், ஆளணி வள விருத்தியையும், சுற்றா0டல் சார் முகாமையையும் சிறப்பாகப் பேணுவதுடன், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும், செயல்திறன் மிக்க பாடசாலையாக மிளிரச் செய்வதே எனது நோக்கமாகும். மாறுகின்ற சூழலுக்கு ஏற்ப மாணவர்களை பொருத்தப்பாடுடையவர்களாக மாற்றுவதும் நல்லொழுக்கமும், சமூக உணர்வும், தேசப்பற்றும், மனித நேயமும் நிறைந்த நற்பிரஜைகளாக உருவாக்குவதும், ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம் எனும் இப்பாடசாலையை ஒரு கல்லூரியாக தரம் உயர்த்துவதும் எனது இலக்காகும்.
திருமதி பு.சத்தியலோஜினி
அதிபர்
ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம்.





