வாழிய ஆலயம் வாழியவே – எம்
ஆருயிர் ஆலயம் வாழியவே
வாழிய வித்திய ஆலயமே – பல
ஆயிரம் ஆண்டுகள் வாழியவே (வாழிய)
தம்பலகமத்தின் செஞ்சுடரே – தினம்
தன்பினில் வைத்தெமை காத்திடுவாய்
உன்பணி செய்திட வந்த நின்றோம் - தினம்
உன்னருள் தந்தெமை காத்திடுவாய் (வாழிய)
கல்வியும் ஞானமும் ஓங்கிடவே –உன்
கருணையில் மாணவர் வாழ்ந்திடவே
நல்லற வாழ்வினைத் தந்தருள்வாய் - உயர்
நற்பணி செய்திட வைத்திடுவாய் (வாழிய)
தேனலும் இன்தமிழ் செயகருணை தினம்
செந்தமிழ் துதி பாடுகிறார்
மேன்னிலை எய்திட வேண்டுகின்றோம் - உயர்
மேன்மை கொள் ஆயிரம் வேண்டுகிறார் (வாழிய)
வீரர்கள் ஆகிட வேண்டுகிறார் மகா
வித்தியாலய மாணவரே
சீரிய இன்னருள் பார்வையிலே – உயர்
சிந்தனைச் செலவரை வேண்டுகிறார் (வாழிய)
ஆசிகள் ஆயிரம் வேண்டுகிறார் - தினம்
ஆசிரியராக பேணுகிறார்
மாசிலராகிய மாணவரின் - புகழ்
மானிலம் மீதினில் ஓங்குகவே (வாழிய)