மாணவர் ஒழுக்கக்கோவை
1. மாணவர்கள் பாடசாலையிலும் சமூகத்திலும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பாடசாலையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
2. மாணவர்கள் அனைவரும் 7.30 மணிக்கு முன்பதாக பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
3. ஒழுங்கான சீருடை, பாதணி மற்றும் சீரான சிகையலங்காரத்துடன் மாணவர்கள் பாடசாலைக்கு வருதல் வேண்டும்.
4. மாணவர்கள் பாடசாலை வளாகத்தினுள் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கடிகாரம், புளுடூத் சாதனங்கள் போன்றன பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
5. மாணவர்களின் வரவு முழுமையாக இருக்க வேண்டும். பாடசாலைக்கு வராத மாணவர்கள் தகுந்த காரணத்துடனான கடிதத்தை அதிபரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
6. பாடசாலையில் நடத்தப்படும் மேலதிக நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள், பரீட்சைகள் ஆகியவற்றில் அனைத்து மாணவர்களுள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
7. பாடவேளைகளில் வகுப்பறைக்கு வெளியே அனுமதியின்றி செல்லக் கூடாது.
8. பாடசாலைக்கு சமூகமளித்த பின்னர் அதிபர், ஆசிரியரின் அனுமதியின்றி பாடசாலைக்கு வெளியில் எக்காரணத்துக்காகவும் செல்ல முடியாது.
9. ஆசிரியர்களை மதித்தலும் அவர்களுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதும் மிகவும் அவசியமானதாகும்.
10. பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பொறுப்பாசிரியர் இன்றி பாடசாலைக்குள் வருவதற்கு அனுமதி இல்லை.





