கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் தம்பலகாமம் பகுதியில் பச்சை வயல் வெளியும், பாய்ந்து செல்லும் நீரோடையும், தலையசைக்கும் தென்னைகளும் நிறைந்து விளங்க ஆதி கோண நாதரின் கோபுர தரிசனமும் ,அருட்கடாட்சமும் எங்கும் பரவி நிட்கும் படியாய் கம்பீரமாய் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. கல்வியாளர்களையும் இலக்கிய வித்தகர்களையும்,பேராசிரியர்களையும், வைத்தியர்களையும்,பொறியியலாளர்களையும்,பெற்று எடுத்த தம்பலகமத்தில் கல்வி பண்போடு சீரிய பண்பாட்டம்சங்களையும் கலாச்சார விழுமியங்களையும் அரணாக கொண்டு நூற்றாண்டை கடந்து தனது புகழை தொடர்ந்தும் தக்க வைத்து கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கின்றது
கல்வி அறிவுடைய ஒழுக்கம் உள்ள சமுதாயம்
வினைத்திறன் மிக்க கற்றலை மேற்கொள்வதன் மூலம் ஆளுமையுடன் அறிவுத்திறனுடைய நற்பிரஜைகளை உருவாக்கல்.